தமிழகத்தில் ‘திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம்’ பிரேமலதா உறுதி

தமிழகத்தில் திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா உறுதி அளித்தார்.
தமிழகத்தில் ‘திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம்’ பிரேமலதா உறுதி
Published on

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் இளங்கோவனுக்கு தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா நேற்று வேனில் அமர்ந்தபடி பிரசாரம் மேற்கொண்டார். டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி, மலைவாசல், நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி சந்திப்பு-காளியம்மன் கோவில் தெருவில் பிரசாரம் செய்தார்.

திருச்சி கோட்டை ஆண்டாள் வீதியில் பிரேமலதா பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் கனவுப்படி, தமிழகத்தில் திருச்சியை 2-வது தலைநகரமாக கொண்டுவர எல்லா விதத்திலும் முயற்சி எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தருகிறோம். சர்வதேச விமான நிலையம் திருச்சியில் இருப்பதால், ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை திருச்சியில் ஏற்படுத்தி, தொழில் முனைவோர்களுக்கு இலவச பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தி தரப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறோம்.

எனவே, நமது வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து நீங்கள் மாபெரும் வெற்றியை தேடித்தர வேண்டும். வெற்றி பெற்றதும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவோம் என்று உறுதியையும் தருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com