கடலூரில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி

கடலூரில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலூரில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி
Published on

கடலூர்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமை தாங்கினார். பின்னர் மகளிர் அனைவரும் பெண்கள் நலம் காப்போம், பெண்மையை போற்றுவோம் என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதை தொடர்ந்து மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை திட்ட இயக்குனர் காஞ்சனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பாரதிசாலை, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து நகராட்சி கூட்ட அரங்கில் சுயஉதவி குழு பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், கவுதமன் நகராட்சி மேலாளர் பழனி மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் பவுனாம்பாள், சரண்யா, சுமதி, பத்மினி மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் கலந்துகொண்டனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் கலைவண்ணன் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com