கருப்பு துணியால் கண்களை கட்டி பயணிகளுக்கு துணிப்பை வினியோகித்த இளைஞர்கள்

பெரம்பலூரில் கருப்பு துணியால் கண்களை கட்டி துணிப்பையை பஸ் பயணிகளுக்கு இளைஞர்கள் வினியோகம் செய்தனர்.
கருப்பு துணியால் கண்களை கட்டி பயணிகளுக்கு துணிப்பை வினியோகித்த இளைஞர்கள்
Published on

பெரம்பலூர்,

தற்போது கடைகளில் பொருட்கள், உணவுகள் உள்ளிட்டவற்றை பாலித்தீன் பைகளில் போட்டு வாங்கி வந்து விடுகிறோம்.

ஆனால் அந்த பாலித்தீன் பைகள் மக்கும் தன்மையற்றவையாக இருப்பது உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. எனினும் இதை கண்டு கொள்ளாமல் பெரும்பாலானோர் பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே முன்பு இருந்ததை போலவே நாம் கடைக்கு பொருட்கள் வாங்க துணிப்பை உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் புதிய பஸ்நிலைய கடைகளில் நேற்று பெரம்பலூர் புதிய பயணம் இளைஞர்கள் குழுவினர் துணிப்பையை வினியோகம் செய்தனர்.

பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கும் துணிப்பையை அந்த இளைஞர்கள் வினியோகம் செய்தனர்.

அப்போது பாலித்தீன் பை பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை எடுத்துரைத்தனர்.

கால்நடைகள் பாலித்தீன் பைகளை உண்பதால் அதற்கு பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு சிரமப்படுகிறது. இது போல் பாலித்தீன் பை உபயோகத்தால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டை உணராததால் ஏற்படும் தீயவிளைவுகளையும் எடுத்து கூறினர்.

எனவே பொதுமக்களும், அரசும் பாலித்தீன் பை உபயோகத்தை கண்டும், காணாமாலும் இருக்காமல் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அந்த இளைஞர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com