வளைகுடாவில் அமைதியை கொண்டுவர துருக்கி அதிபர் முயற்சி

வளைகுடாவில் பதற்றத்தை நிலவச் செய்யும் முயற்சியாக துருக்கி அதிபர் எர்டோகன் சவூதி அரேபியாவிற்கும், குவைத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
வளைகுடாவில் அமைதியை கொண்டுவர துருக்கி அதிபர் முயற்சி
Published on

துபாய்

ஏற்கனவே குவைத் அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. சவூதி அரசருடன் எர்டோகன் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அதற்கான நிதி வசதிகளை முடக்குவது குறித்து விவாதித்ததாக சவூதி செய்தி நிறுவனம் கூறியது.

அதன் பின்னர் எர்டோகன் குவைத்திற்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர் கத்தார் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. சவூதி உட்பட நான்கு நாடுகள் கத்தாரிலிருந்து துருக்கியின் ராணுவ முகாம் நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. துருக்கி - கத்தார் இடையிலான 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கத்தாரில் 1,000 துருக்கி நாட்டுத் துருப்புகள் தங்கலாம்.

துருக்கியும், கத்தாரும் முஸ்லிம் பிரதர்ஹூட் எனும் இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்புள்ளவை. சவூதி, எகிப்து ஆகியவை இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று குற்றஞ்சாட்டுகின்றன. எகிப்தில் முக்கிய அரசியல் சக்தியாக பிரதர்ஹூட் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com