டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அகில இந்திய போராட்டத்துக்காக டெல்லி சென்ற விவசாயிகளில் சிலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வலியுறுத்தி நேற்று காலை டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்த நகலை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com