டெல்லி விமான நிலையம்: ட்ரோன் போன்ற பொருட்கள் காணப்பட்டதால் விமானங்கள் தாமதம்

பரபரப்பாக செயல்படும் டெல்லி விமான நிலையத்தில் ட்ரோன் போன்ற பொருள் காணப்பட்டதால் விமான இயக்கம் தாமதமாகியது.
டெல்லி விமான நிலையம்: ட்ரோன் போன்ற பொருட்கள் காணப்பட்டதால் விமானங்கள் தாமதம்
Published on

புதுடெல்லி

ஒரே நாளில் இரு முறை ட்ரோன் போன்ற பொருட்கள் விமான ஓடுதளத்தில் காணப்பட்டதாக விமானிகள் புகார் கூறினர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் 45 நிமிடங்களும் விமான இயக்கம் நிறுத்தப்பட்டது.

விமான சேவைக்கான பொது இயக்குநரகம் ஆளில்லா பொருட்களின், ட்ரோன்கள் உட்பட பலவற்றின் சேவையை தடை செய்துள்ளது. முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்கள் துவாரகா பகுதியை ஒட்டி நிகழ்ந்துள்ளன. காவல்துறையினர் அப்பகுதிகளில் சோதனையிட்டு பிரச்சினை ஏதுமில்லை என்று கூறியதைத் தொடர்ந்து விமான இயக்கம் துவங்கியது.

மூன்று விமான ஓடுதளங்களை கொண்டுள்ள டெல்லி விமான நிலையத்தில் உச்சபட்ச விமான இயக்கம் இருக்கும் நேரங்களில் ஒரு மணி நேரத்தில் 70 விமானங்கள் பயணிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com