பாகிஸ்தான்; 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்து கோவில்

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்கு பிறகு இந்து கோவில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்; 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்து கோவில்
Published on

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு, இந்நிலையில், பாகிஸ்தானின் தொழில்துறை நகரமான சியால்கோட்டில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான ஷவாலா தேஜா சிங் எனும் கோயில் 1947-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது மூடப்பட்டது. இதன் பிறகு, 1992 ஆம் ஆண்டில், பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் ஏற்ப்பட்ட கலவரத்தில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மூடிய நிலையிலேயே கோவில் இருந்துள்ளது.

இதையடுத்து, 72 ஆண்டுகளுக்கு பிறகு சர்தார் தேஜா சிங் கட்டி, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் கோவிலில் வழிபாடு செய்ததுடன் பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அரசு, 400 இந்து கோவில்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது, இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கோவிலை திறக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com