ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?

நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?
Published on

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில், நாளை மறுநாள் (8-ம் தேதி) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் (மார்ச் 8 ம் தேதி) கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.

ஈஷாவில் 30-ம் ஆண்டாக சத்குரு முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com