

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விசேஷ அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடைபெற்றது.
இதேபோல் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. காஞ்சீபுரம் முத்தியால்பேட்டையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.