தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு
Published on

தினமும் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனை தரிசிப்பது மிக விசேஷமானது.

வழிபாடுகளும் பலன்களும்

* பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.

* பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.

* ஒவ்வொரு நாளும் மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஈசனை தரிசனம் செய்ய பாவம் விலகும்.

* பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் ஒரு வருடம் ஆலயத்திற்கு சென்று வந்த பலனை பெறுவார்கள்.

* சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிக விசேஷமானது. அன்று சனி பகவானின் தோஷத்துக்கு ஆளானவர்கள் ஈசனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

* சனி பிரதோஷம் அன்று வழிபட்டவர்கள் ஐந்து வருட காலம் கோவிலுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறுவார்கள்.

* பிரதோஷ நாளன்று ஈசனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com