'சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?' - அமைச்சர் அன்பில் மகேஷ்

இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் பா.ஜ.க. அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா? என அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
'சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?' - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மணப்பாறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் வரவில்லையா? இப்போதுதான் மகளிர் தினம் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா?

ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என்பதற்காக தேர்தல் வரும்போது பிரதமர் மோடி கிழவிகள் தினம் கூட கொண்டாடுவார். உங்களுக்கு பாக்கு, வெத்தலை இலவசமாக தருகிறேன் என்றும் கூறுவார்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருடனும் நாம் அண்ணன், தம்பி போல பழகி வருகிறோம். நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க. செய்து வருகிறது."

இவ்வாறு அன்பில் மகேஷ் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com