உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி
Published on

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 11 ஆட்டத்தில் விளையாடி 3 சதம், 6 அரைசதத்துடன் 765 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் கோலி, தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com