“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” - சென்னை கேப்டன் ஜடேஜா

டோனி கடைசி பந்து வரை நிலைத்து விட்டால் நிச்சயமாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” - சென்னை கேப்டன் ஜடேஜா
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தபரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி -வது வெற்றியை பெற்றது.

இதில் மும்பை நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள்

தேவை என்ற நிலையில் டோனி 6,4,2,4 என ரன்கள் விளாசி வெற்றி பெற்ற வைத்தார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடி தான் என்று நிரூபித்து காட்டிய டோனியை எல்லா தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்டம் நகர்ந்த விதத்தை பார்க்கையில் நாங்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் சிறந்த பினிஷர் (டோனி) களத்தில் இருந்ததால் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பினோம்.

அவர் கடைசி பந்து வரை நிலைத்து விட்டால் நிச்சயமாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும். அதை அவர் மீண்டும் ஒரு முறை உலகுக்கு நிரூபித்து காட்டி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com