ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிக்கு எம்.எஸ்.தோனி அட்வைஸ்

கடந்த13-ந் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
image courtesy: instagram/mahi7781
image courtesy: instagram/mahi7781
Published on

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் கடந்த13-ந் தேதி இரவு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

உலகமே உற்று நோக்கிய இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். உலக தலைவர்கள், உலக அளவில் உள்ள முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், பிற துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த வகையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரது இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான மகேந்திர சிங் தோனி அவரது குடும்பத்தோடு நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார். அதுமட்டுமின்றி தற்போது திருமணம் முடித்த கையோடு அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்து வாழ்த்து மற்றும் அறிவுரையை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் தோனி குறிப்பிட்டுள்ள அந்த பதிவில், "ராதிகா உங்களுடைய இந்த சிரிப்பு என்றுமே மங்கக்கூடாது. ஆனந்த் உங்களை சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அன்பும், கருணையும் ராதிகாவிடமும் காண்பியுங்கள். அவரை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை எவ்வித நெருடலும் இன்றி மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும். விரைவில் சந்திப்போம் வாழ்த்துகள்"என்று பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com