பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது - ஷேவாக் கணிப்பு

பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது - ஷேவாக் கணிப்பு
Published on

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மான்செஸ்டரில் நாளை நடப்பதை யொட்டி இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் யு-டியூப்பில் வீடியோ மூலம் விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது ஷேவாக், டாஸ் உள்ளிட்ட விஷயங்கள் எது எப்படி அமைந்தாலும் 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த இயலாது என்று உறுதிப்பட கூறினார். இதற்கு பதில் அளித்த அக்தர், பாகிஸ்தான் டாசில் வெற்றி பெற்றால் போட்டியையும் வெல்லும் என்று நினைக்கிறேன். அதே போல் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட அணியாலும் வெல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com