சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி ஷகிப் அல்-ஹசன் சாதனை

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி ஷகிப் அல்-ஹசன் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி ஷகிப் அல்-ஹசன் சாதனை
Published on

மஸ்கட்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் 4 ஓவர்களில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவரது ஒட்டுமொத்த சர்வதேச விக்கெட் எண்ணிக்கை 108 ஆக (89 ஆட்டம்) உயர்ந்தது.

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை முன்னாள் வீரர் லசித் மலிங்காவிடம் (107 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார். இந்த சாதனை பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 3-வது இடத்திலும் (99 விக்கெட்), பாகிஸ்தானின் அப்ரிடி 4-வது இடத்திலும் (98 விக்கெட்), ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் 5-வது இடத்திலும் (95 விக்கெட்) உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com