உலகக் கோப்பை இறுதி போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு- போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

இறுதி போட்டி அன்று மெல்போர்னில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image Tweeted By TheRealPCB/ englandcricket
Image Tweeted By TheRealPCB/ englandcricket
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்றது.

இதனால் விமர்சனங்களுக்கு உள்ளான பாகிஸ்தான் அணி அதற்கடுத்த போட்டிகளில் வென்ற நிலையில் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம்வீழ்ந்து தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் அதிர்ஷ்டத்துடன் அரை இறுதிக்குள் நுழைந்து ஆச்சரியப்படுத்தியது.

அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 7 விக்கெட் தேசத்தில் அசால்டாக தோற்கடித்த பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளதை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மெல்போர்ன் நகரின் 13-ஆம் தேதிக்கான வானிலை நிலவரம் அமைந்துள்ளது. நாளை மறுதினம் போட்டி நடைபெறும் நேரத்தில் மெல்போர்னில் மிக அதிகமாக 95 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் ஐசிசி ரிசர்வ் தினத்தை (நவம்பர் 14) வைத்துள்ளது.

ஆனால் ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றமாக அன்றைய தினத்திலும் 95 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாக் அவுட் போட்டிகளில் வெற்றி தோல்வி முடிவை அறிவிக்க இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்களாவது விளையாடி இருக்க வேண்டும். ஒருவேளை அது நடக்காமல் மழையால் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் சாம்பியன் கோப்பை பாகிஸ்தான்- இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com