உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா..? ராகுல் டிராவிட் பதில்

வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பிட்னெஸ் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அழுத்தம் காரணமாக முதுகில் உள்ள எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டதால் தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகி இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆடுவது பெருத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கவுதாத்தியில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு டிராவிட் பதிலளிக்கையில், 'மருத்துவ அறிக்கைக்குள் நான் ஆழமாக செல்லவில்லை. பும்ரா காயம் விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அவரது உடல் தகுதி நிலை குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக காத்து இருக்கிறோம். தற்போது அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் எதுவும் சொல்ல முடியும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com