பார்முலா-1 கார் பந்தயம்: 100வது வெற்றியை பதிவு செய்து ஹாமில்டன் சாதனை!

பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பை லூயிஸ் ஹாமில்டன் தன் வசப்படுத்தினார்.
பார்முலா-1 கார் பந்தயம்: 100வது வெற்றியை பதிவு செய்து ஹாமில்டன் சாதனை!
Published on

ரஷ்யா,

ரஷ்யாவில் நேற்று நடந்த பார்முலா-1 கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் வீரர் லூயில் ஹாமில்டன் தனது 100வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும் பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பை தன் வசமாக்கியுள்ளார்.

7 முறை பார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ஹாமில்டன், ரஷ்யாவில் மழைக்கு இடையே நடந்த தொடரில் வென்றதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்முலா-1 பந்தயத்தின் இரண்டாவது இடத்தை ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும், முன்றாவது இடத்தை பெராரி அணியின் வீரர் கார்லோஸ் சயின்சும் தக்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com