மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடக்கம்


மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை  ஆட்டம் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2024 2:53 PM GMT (Updated: 18 May 2024 2:54 PM GMT)

மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மழை நின்றதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story