ஷாங்காயில் உச்சம் தொட்ட கொரோனா...சீன அரசு எடுத்த அதிரடி முடிவு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 April 2022 9:16 AM GMT (Updated: 15 April 2022 9:16 AM GMT)

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சீன அதிபர் மீண்டும் அமல்படுத்தியுள்ளார்.

ஷாங்காய்,

வர்த்தக நகரமான ஷாங்காயில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரத்து 573 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து பதிவான அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும். இந்நிலையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்ததை அடுத்து, கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.


Next Story