ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா
Published on

ஈரோடு

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 936 பேர் குணமடைந்தனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்தார். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com