ராமர் கோவில் குறித்து பிரதமர் மோடி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே


ராமர் கோவில் குறித்து பிரதமர் மோடி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
x

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மும்பை,

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்துவிடுவார்கள் என்றும், புல்டோசரை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் மும்பையில் இன்று 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ், சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசரால் இடித்துவிடுவார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் இதுவரை புல்டோசரை பயன்படுத்தியது இல்லை. வாக்காளர்களை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்தும் பாதுகாக்கப்படும்" என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.


Next Story