ஈரோடு சம்பத் நகரில் உள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை


ஈரோடு சம்பத் நகரில் உள்ள  பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை
x

ஈரோடு சம்பத்நகரில் உள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு சம்பத்நகரில் உள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.52 லட்சம்

ஈரோடு சம்பத்நகரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் இருந்தது. அங்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அம்ரூத் திட்டத்தில் ரூ.52 லட்சத்து 18 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது.

அங்கு மக்கள் அமரும் வகையில் இருக்கைகள், சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழ்வதற்காக ஊஞ்சல், சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதையும் போடப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்ளும்போது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புல் வெளி அமைக்கப்பட்டது. கழிப்பிடமும் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டது.

சீரமைக்க கோரிக்கை

இந்த பூங்காவை முறையாக பராமரிக்காததால் தற்போது புல்வெளிகள் காய்ந்து கருகிபோய் காணப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால், பழுதடைந்து வருகிறது. கழிப்பிடமும் சிதிலமடையும் நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "பூங்காவை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டின் திறக்கப்பட்டால், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். சிறுவர்-சிறுமிகளை மாலை நேரங்களில் பூங்காவுக்கு அழைத்து வந்து விளையாட வைக்கலாம். பூங்கா சீரமைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உடனடியாக சீரமைக்க வேண்டும்", என்றார்.


Next Story