சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை-ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி

சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டால் பா.ஜனதாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை-ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
Published on

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காதி பொருட்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை சித்தராமையா விமர்சிக்கிறார். கர்நாடகத்தில் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த அவர், நமது தேசிய கொடி குறித்து குறைத்து பேசுவது நல்லதல்ல. அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது காதி கிராமோதயாவுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தார் என்பதை சற்று யோசித்து பார்க்க வேண்டும்.

காதி கிராமோதயாவுக்கு பா.ஜனதா கொடுத்த ஊக்கம் அளவுக்கு யாரும் வழங்கவில்லை. சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அது காங்கிரஸ் கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி கூறியதால் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தனர். ஆனால் விழா மேடையில் டி.கே.சிவக்குமார் சகஜமாக இருக்கவில்லை.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com