

சென்னை,
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்" என வைக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.