3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை- பாண்டவர் அணி

3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை என பாண்டவர் அணி கூறி உள்ளது.
3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை- பாண்டவர் அணி
Published on

சென்னை

நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு:-

ஆய்வாளர் குழு அமைத்து சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் உண்மையான வடிவம் மீண்டும் வெளி கொண்டு வரப்படும்.

* திரைப்படம் வெளியாகும் போது நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்ப்பந்தத்தில் சிக்க வைப்பதை தடுக்க சட்டரீதியான பாதுகாப்பு தரப்படும்.

* தற்காலிகமாக தடைப்பட்டிருந்த நாடக விழாக்கள், போட்டிகள், விருது விழாக்கள் புதிய கட்டடத்தில் அரங்கேறும்.

* தகுதியான கலைஞர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை.

* தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com