இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம்; பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டி

திரை இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம் பற்றி பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம்; பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டி
Published on

புனே,

இந்தி திரையுலகின் கனவு கன்னி என வர்ணிக்கப்படுபவர் நடிகை ஹேமா மாலினி. பா.ஜ.க.வை சேர்ந்த அவர் எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டியொன்று வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதில், ஒரு முறை படப்பிடிப்பின்போது, இயக்குநர் ஒருவர் அவரிடம் சேலையில் 'பின்' அணிய வேண்டாம் என கூறியுள்ளார். சேலையின் தலைப்பு கீழே சரிந்து விடாமல் இருப்பதற்காக பொதுவாக பெண்கள் இந்த 'பின்' அணிவது வழக்கம். அதுபோன்று ஹேமா மாலினியும் 'பின்' அணிந்து வந்து உள்ளார்.

இயக்குநர் அவரிடம், 'பின்' அணிய வேண்டாம் என்றும், சேலையின் தலைப்பை சரிய விடவும் என்று கூறியுள்ளார். அதுபோன்ற ஒரு காட்சியை படம் பிடிக்க அவர் விரும்பியுள்ளார்.

நான் எப்போதும் சேலையில் 'பின்' அணிந்து செல்வேன். இயக்குநர் அப்படி கூறியதும், சேலையின் தலைப்பு காட்சியின்போது சரிந்து விழும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், அதுவே எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள் என பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியின்போது, இயக்குநர் ராஜ் கபூர், சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு வழங்கினார். எனினும், நான் அதில் நடிக்கமாட்டேன் என அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், நான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். இதனை அவர் தன்னிடம் கூறினார் என்று ஹேமா மாலினி கூறியுள்ளார். அப்போது, ஹேமா மாலினியின் தாயாரும் அவர் நடிக்கமாட்டார் என்றே கூறியுள்ளார்.

இதன்பின்பு, சத்யம் சிவம் சுந்தரம் படத்தில், அந்த வேடத்தில் நடிகை ஜீனத் அமன் நடித்து, படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களையும் சென்றடைந்தது.

நடிகை ஹேமா மாலினி, சீதா அவுர் கீதா, ஷோலே, ட்ரீம் கேர்ள், தி பர்னிங் ட்ரெயின், சட்டே பே சத்தா மற்றும் ஜானி மேரா நாம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே புகழ் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com