மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு..!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு..!
Published on

சென்னை,

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்நிலையில், கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது கரங்களால் அந்த விருது வழங்கப்படவுள்ளது.

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர். கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com