கவர்ச்சியில் களம் இறங்கிய நடிகை ரிது வர்மா


கவர்ச்சியில் களம் இறங்கிய நடிகை ரிது வர்மா
x

ரிது வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தெலுங்கில் 2013-ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரிது வர்மா. தமிழில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'நித்தம் ஒரு வானம்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் 'துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மசாக்கா என்ற படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

‘மாடர்ன் மகாலட்சுமி' என்று அழைக்கப்படும் ரிது வர்மா, படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. இதற்கிடையில் தனது நலம் விரும்பிகளின் பேச்சை கேட்டு, ‘கவர்ச்சியாக நடித்து தான் பார்ப்போமே...' என்று முடிவு எடுத்துள்ளாராம்.

இதனையடுத்து ‘ரிது வர்மா படங்களில் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு குத்தாட்டம் போடவும் தயாராகவே இருக்கிறார். நல்ல வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்' என்கிறார்கள் நடிகையின் நண்பர்கள்.

1 More update

Next Story