விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
Published on

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார். அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் இன்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தைக் குறிப்பிட்டு, இவரைப்பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு வெரி கூல் என ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com