நடிகைகள் மட்டும் கைது: நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா? - தனுஷ் பட நடிகை ஆவேசம்

நடிகைகள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள், நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா என்று தனுஷ் பட நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகைகள் மட்டும் கைது: நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா? - தனுஷ் பட நடிகை ஆவேசம்
Published on

தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி ஆகியோர் கைதானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரியா சக்கரவர்த்தி போதை பொருளை பயன்படுத்தும் 25 பிரபலங்கள் பட்டியலை போலீசாரிடம் கொடுத்து இருப்பதாகவும் இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

போதை பொருள் வழக்கில் 3 நடிகைகளை மட்டும் கைது செய்ததை நடிகை பாருல் யாதவ் கண்டித்துள்ளார். இவர் தமிழில் தனுசுடன் டிரீம்ஸ் மற்றும் புலன் விசாரணை2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வாலுடன் பாரிஸ் பாரிஸ் தமிழ் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அதிக கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பாருல் யாதவ் கூறும்போது, இறுதியாக பாலின சமத்துவம் வென்றுள்ளது. போதை பொருட்கள் சமூகத்தில் இருந்து அழிக்கப்பட வேண்டியவை. ஆனால் இந்தியாவில் இந்த 3 பெண்கள் மட்டும்தான் போதை பொருளை பயன்படுத்துகிறார்களா. வேறு யாரும் இல்லையா. பெரிய கம்பெனி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு துறையினர், நடிகர்கள் பயன்படுத்தவில்லையா? என்று சாடி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com