எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து- புகைப்படம் வைரல்

சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடந்துள்ளது.
image courtecy: instagram@iamamyjackson
image courtecy: instagram@iamamyjackson
Published on

சென்னை,

மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதனால் எமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாசுடன் இங்கிலாந்தில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக நடிகை எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து ஜாலியாக வெளியே சுற்றும் புகைப்படங்களையும் எமி ஜாக்சன் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடந்துள்ளது. இதில், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர். இது குறித்தான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com