பல அற்புதமான விஷயங்களின் வெளிப்பாடுதான் கொட்டுக்காளி - நடிகை அன்னா பென்

கொட்டுக்காளி படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த அன்னா பென் அவரது கதாப்பாத்திரம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பல அற்புதமான விஷயங்களின் வெளிப்பாடுதான் கொட்டுக்காளி - நடிகை அன்னா பென்
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அத்துடன் இவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து சூரி அவரது எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில் இப்படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம், இப்படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் கொட்டுக்காளி." என்று பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அன்னா பென் அவரது கதாபாத்திரத்தில் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனா என்ற கதாபாத்திரத்தில் அன்னா பென் நடித்துள்ளார்.

இதுகுறித்து அன்னா பென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "மீனா என்னுள் ஒரு அங்கம் என்பது நான் அறிந்ததே இல்லை, பல அற்புதமான விஷயங்களில் கொட்டுக்காளி ஒரு வெளிப்பாடு. இந்த கொட்டுக்காளி அவள் எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதே போல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவள். மதுரை வழியாக இந்த பயணத்தில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

இந்த திரைப்படம் மற்றொரு வெற்றிப்படமாக சூரிக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com