நடிகர் அர்ஜூன் தாயார் காலமானார் - கன்னட திரை பிரபலங்கள் இரங்கல்

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார்.
நடிகர் அர்ஜூன் தாயார் காலமானார் - கன்னட திரை பிரபலங்கள் இரங்கல்
Published on

சென்னை,

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த ஆக் ஷன் நாயகனாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைல் பாணியை வைத்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்ததால் இவரை அனைவரும் ஆக் ஷன் கிங் என அழைத்து வந்தனர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவளுக்கு வயது 85. கர்நாடக மாநிலம் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். இந்நிலையில், லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு கன்னட திரையுலக பிரபலங்கள் பலரும் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com