பிஎம்டபில்யூ கார் அழகா... அல்லது நானா? ரசிகர்களை ஏங்க வைத்த ஷிவானி..!

ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
பிஎம்டபில்யூ கார் அழகா... அல்லது நானா? ரசிகர்களை ஏங்க வைத்த ஷிவானி..!
Published on

சென்னை,

சின்னத்திரையின் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். 22 வயது மட்டுமே ஆகி இருக்கக் கூடிய  இவருக்கு சமூக வலைத்தளங்களில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார், இதனை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இரட்டை ரோஜாக்கள் எனும் நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அந்த நாடகத்தில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அட்டகாசமான பல புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த ஷிவானி குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் எல்லாம் பேச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தன. இந்தநிலையில் தற்போது சேலையில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com