தணிக்கை குழு எதிர்ப்பால் ஜீவா படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்?

ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படத்தை குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார்.
தணிக்கை குழு எதிர்ப்பால் ஜீவா படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்?
Published on

நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.

நடிகை கவுதமி தலைமையிலான மறுதணிக்கை குழுவினரும் படத்தை பார்த்து அனுமதி வழங்க மறுத்தனர். படத்தில் ஆட்சேபகரமாக பல காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கினால் தான் சான்றிதழ் அளிக்க முடியும் என்றும் கூறிவிட்டனர். படத்தை மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு செல்லவும் ஆலோசனை கூறினர்.

அங்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அத்துடன் தணிக்கை தீர்ப்பாயத்துக்கு சென்றால் மேலும் பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டு விடும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். இதைத்தொடர்ந்து தணிக்கை குழுவினர் தெரிவித்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரைக்கு கொண்டு வரலாமா என்று படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகளும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்யும் காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com