கொலை செய்ய சதி செய்கிறார்... மனைவி மீது பிரபல நடிகர் வழக்கு

கூலி படையை ஏவி தன்னை கொலை செய்ய சதி செய்வதாக குடும்ப நல கோர்ட்டில் மனைவி மீது நடிகர் நரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொலை செய்ய சதி செய்கிறார்... மனைவி மீது பிரபல நடிகர் வழக்கு
Published on

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ். இவர் தமிழில் 'எலந்த பழம்' பாடல் மூலம் பிரபலமான விஜய நிர்மலாவின் மகன். ரம்யா என்பவரை நரேஷ் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழில் வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை பவித்ரா லோகேசுடன் நரேசுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். சமீபத்தில் ஓட்டலில் ஒரே அறையில் நரேசும், பவித்ராவும் தங்கி இருந்தபோது பிரிந்த மனைவி ரம்யா அறைக்குள் புகுந்து இருவரையும் செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது.

இந்த நிலையில் ரம்யா கூலி படையை ஏவி தன்னை கொலை செய்ய சதி செய்வதாக குடும்ப நல கோர்ட்டில் நரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். ரம்யா மற்றும் ரோஹித் செட்டி ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

நரேஷ் கூறும்போது, "திருமணமான சில நாட்களிலேயே ரம்யா என்னை துன்புறுத்தினார். எனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். முன்னாள் மந்திரி ரகுவீரா மூலம் போன் செய்து மிரட்டுகிறார். அவரது கொடுமையை தாங்க முடியவில்லை, எனவே கோர்ட்டுக்கு வந்துள்ளேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com