

மும்பையில் இருந்து 100 உறவினர்கள் இதற்காக சென்று இருந்தார்கள். திருமணம் நடந்த ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி இருந்தார்கள்.
தீபிகா படுகோனே திருமணத்தை படம் பிடிப்பதை தடுக்க செல்போன் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர். இந்த கெடுபிடியால் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. அவர்களாக வெளியிட்டால்தான் உண்டு. திருமண படங்களை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து எரிச்சலை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பு கூடு படத்தை வெளியிட்டு தீபிகா படுகோனே திருமண படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டனர் என்று குறிப்பிட்டு கலாய்த்து இருந்தார். அவர் கருத்தை ரசிகர்கள் வரவேற்று நாங்கள் நினைத்ததை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று பாராட்டினர்.
இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் தங்கள் திருமணத்தை டெல்லியில் உள்ள ஒரு இன்சூரன்சு நிறுவனத்தில் பலகோடிக்கு காப்பீடு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. விமான விபத்து, ஓட்டலில் தீவிபத்து, குண்டு வெடிப்பு போன்றவைகளை குறிப்பிட்டு காப்பீடு செய்து உள்ளனர். காப்பீடு தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.