'ஜெயம்' படத்தை தவற விட்ட நடிகை...யார் தெரியுமா?


Do you know who the actress who missed out on Jayam?
x
தினத்தந்தி 11 Nov 2025 7:45 PM IST (Updated: 11 Nov 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தில், நிதினுக்கு ஜோடியாக சதா நடித்தார்.

சென்னை,

தெலுங்கு நடிகர் நிதினை சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் ’ஜெயம்’. இயக்குனர் தேஜா இயக்கிய இந்தப் படம் அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில், நிதினுக்கு ஜோடியாக சதா நடித்தார். கோபிசந்த் வில்லனாக நடித்தார்.

ஆனால், இந்தப் படத்தில் சதாவுக்கு முன் வேறொரு கதாநாயகி நடிக்க இருந்திருக்கிறார். அந்த கதாநாயகி யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல, ராஷ்மி கவுதம்தான். இதனை நிதின் பட விழா ஒன்றில் கூறி இருந்தார், ராஷ்மி பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான ஜெயம் படம் அதே பெயரில் தமிழில் 2003-ம் ஆண்டு வெளியானது. இதில், ரவி மோகன் , சதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

1 More update

Next Story