நடிகர் அஜித்தின் எளிமை கண்டு வியந்த திரைப்பட விமர்சகர்


நடிகர் அஜித்தின் எளிமை கண்டு வியந்த திரைப்பட விமர்சகர்
x

அஜித்தை நேர்காணல் செய்த அனுபமா சோப்ரா அந்த நேர்காணல் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது.

அந்த பெட்டியில் அஜித் மனம் விட்டு பல விஷயங்களை பேசினார். விஜயின் அரசியல் பிரவேசம், ஒரு நடிகனாக தான் இழந்த விஷயம், ரசிகர்களின் மனப்பான்மை என பல விஷயங்களை பேசினார். குறிப்பாக ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அதில் பேசியிருந்தார். மேலும், மோட்டார் ரேஸில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றெல்லாம் கூறினார்.

இந்நிலையில், அஜித்தை நேர்காணல் செய்த அனுபமா சோப்ரா அந்த நேர்காணல் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஜித்தின் நேர்காணல் குறித்து பேசிய அனுபமா சோப்ரா, “துபாயில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தேன். அவர் அங்கு தனியாக வந்தார். ஆனால், என்னுடன் ஒப்பனையாளர் இருந்தார். அஜித் மேக்கப் செய்து கொள்ளவே இல்லை. அவரது செயல் எனக்கு அது சங்கடமாக இருந்தது. மேலும் மற்றவர்களுக்கு அவர் அறை கதவை திறந்துவிடுகிறார். அவரின் எளிமையை கண்டு நான் கூச்சப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story