நிதின் சத்யா, சம்யுக்தா நடிக்கும் 'கொடுவா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நிதின் சத்யா, சம்யுக்தா நடித்துள்ள 'கொடுவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நிதின் சத்யா, சம்யுக்தா நடிக்கும் 'கொடுவா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'கொடுவா' படத்தில் நடித்து வருகிறார்.

'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் 'கொடுவா' திரைப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தத்தில் வெளியிட்டார்.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com