நடிகர் ஷாருக் கானின் விநாயகர் சிலை பதிவு; லட்சக்கணக்கில் குவிந்த லைக்குகள்

நடிகர் ஷாருக் கான் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்ட நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தன.
நடிகர் ஷாருக் கானின் விநாயகர் சிலை பதிவு; லட்சக்கணக்கில் குவிந்த லைக்குகள்
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாருக் கான் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, வணங்கி உள்ளார். இந்த நிலையில், விநாயகருக்கு விடை கொடுத்து நேற்றிரவு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு விநாயக கடவுளை காணும் வரை அவரது ஆசிகள் நம் அனைவரிடமும் தொடர்ந்து இருக்கும்... கணபதி பாபா மோரியா!!! என தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவு வெளியான ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை கிளிக் செய்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டில், தனது இளைய மகன் ஆபிராம் கான், விநாயக கடவுளை வணங்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். மதசார்பற்ற அணுகுமுறைக்காக ஷாருக் கானை சிலர் பாராட்டினர்.

எனினும், ஒரு முஸ்லிம் என்ற வகையில் இது ஒரு பாவ செயல் என்று பலர் அவரை வசைபாடினர். ஆனால், இதுபோன்ற நெகடிவ் பதிவுகளை கண்டுகொள்ளாமல் விநாயகர் சதுர்த்தி அன்று, தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடிகர் ஷாருக் கான் தனது வீட்டில் விநாயக கடவுளை வரவேற்கும் மரபை கடைப்பிடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com