

பெரிய படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்றும் கிசுகிசுக்கள் வருகின்றன. இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
எனக்கு பணம் தேவை இல்லை. கதைதான் முக்கியம். எந்த துறையானாலும் வாய்ப்பு இருக்கும்போது பயன்படுத்தி நிறைய சம்பாதித்து விட வேண்டும் என்று சொல்வார்கள்.
மார்க்கெட் இருக்கும்போது நடிகைகள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் சொல்வது உண்டு. நான் அப்படிப்பட்ட ரகம் இல்லை. எனக்கு பணம் முக்கியம் இல்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு வரவேண்டும்.
கோடிகோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதை விட நல்ல கதைகளில் நடித்தேன் என்று பெயர் வாங்கவே விரும்புகிறேன். சம்பளத்தை உயர்த்த மாட்டேன்.