தமிழ்ப்பட வில்லனுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு

தமிழ்ப்பட பிரபல வில்லன் நடிகர் சம்பத்ராம்க்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
தமிழ்ப்பட வில்லனுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு
Published on

தமிழில் 211 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் சம்பத்ராம். தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சம்பத்ராம் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாளிகப்புரம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில் முதன்மை வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். மாளிகப்புரம் படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.சம்பத்ராம் கூறும்போது, "மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 6 படங்கள் நடித்துள்ளேன். 6-வது படமாக வந்துள்ள மாளிகப்புரம் பெரிய வெற்றி பெற்றதன் மூலம் எனது 25 ஆண்டு உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் மற்றும் கட்டில், கங்கனம், சூர்ப்பனகை ஆகிய தமிழ் படங்களிலும் பிரபாஸின் சலார், நேனே நான் ஆகிய தெலுங்கு படங்களிலும் மூன்று மலையாள படங்களிலும் நடிக்கிறேன் தி கிரேட் எஸ்கேப், தி பேர்ல் பிளட் ஆகிய ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com