ஆந்திராவை அலறவிடும் ஹனிரோஸ்...! கவர்ச்சியால் கல்லாகட்டுகிறார்...!

தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
ஆந்திராவை அலறவிடும் ஹனிரோஸ்...! கவர்ச்சியால் கல்லாகட்டுகிறார்...!
Published on

ஐதராபாத்

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார். கேரளாவில் உள்ள தொழிலதிபர்களின் பார்வை முழுவதும் ஹனி ரோஸ் பக்கம் தான் உள்ளது. ஏனெனில் அங்கு புதிதாக திறக்கப்படும் பெரிய கடைகளின் திறப்பு விழாவுக்கு ஹனி ரோஸ் தான் முதலில் புக் செய்யப்படுகிறார்.

கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஹனி ரோஸை பார்ப்பதற்கென மிகப்பெரிய கூட்டமே வருவதால், அவருக்கு தற்போது இதுவே பிசினஸ் ஆகிவிட்டது. ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை இப்படி கடை திறப்பு விழாக்களுக்கு சென்றே சம்பாதித்து விடுகிறாராம்.

அண்மையில் கூட ஆந்திரா மாநிலத்தில் மார்கப்பூர் என்கிற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு ஹனி ரோஸை தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதை ஏற்று ஹனி ரோஸும் அதில் பங்கேற்றார். அந்த கடை திறப்பு விழாவுக்காக அவர் ரூ.50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆந்திராவுக்கு மட்டும் தான் இந்த ரேட்டாம், அதுவே தனது சொந்த மாநிலமான கேரளாவில் அதைவிட கம்மி ரேட் என தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் டீல் பேசி சம்பாதித்து வருகிறாராம் ஹனி ரோஸ்.

ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸ் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நடிகையிடமிருந்து தேதிபெற முடியவில்லை என்றும் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com