“தந்தை கனவை நிறைவேற்றினேன்” -நடிகர் ஜெயம்ரவி

“எனது தந்தை எடிட்டர் மோகன், நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ ஆக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தார். ஆனால் அது நடக்கவில்லை எடிட்டர் ஆகி விட்டார்.
“தந்தை கனவை நிறைவேற்றினேன்” -நடிகர் ஜெயம்ரவி
Published on

நடிகர் ஜெயம்ரவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தந்தை எடிட்டர் மோகன், நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ ஆக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தார். ஆனால் அது நடக்கவில்லை எடிட்டர் ஆகி விட்டார். நான் நடிகனாகவும் எனது அண்ணன் மோகன்ராஜா இயக்குனராகவும் ஆகி விட்டோம். அவரது கனவை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். இதற்காக சந்தோஷப்பட்டார்.

மூன்று சுற்று ஓடி வெற்றி கிடைக்க கூடிய நான்காவது சுற்றை எங்களிடம் அவர் தந்து இருக்கிறார். அதை பொறுப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. எனது தந்தை தனிமனிதன் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இதன்மூலம் மற்றவர்களுக்கும் அவரது அனுபவங்கள் உதவியாக இருக்கும்.

எனது அம்மா காந்திகிராமத்தில் படித்தவர். காந்தியின் நல்ல குணங்கள் அனைத்தையும் அம்மாவிடம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார். அவர் வேலியற்ற வேதம் என்ற நூலை எழுதி இருக்கிறார். இவ்வாறு ஜெயம்ரவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com