பிரபல நடிகைக்கு இருந்த மதுப்பழக்கம்

ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் கூறியுள்ளார்.
பிரபல நடிகைக்கு இருந்த மதுப்பழக்கம்
Published on

பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தனக்கு மதுப்பழக்கம் இருந்தது என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து காயத்ரி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், எனக்கு ஒரு காலத்தில் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. மதுபோதையில் செய்த தவறுகளை மட்டும் கேட்காதீர்கள். அதை இப்போது சொல்வதும் சரியல்ல. சுய நினைவுடன் அவற்றை செய்யவில்லை. பின்னர் வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.

என்னுடன் மஹே படத்தில் இணைந்து நடித்த அனீஷ் மேனன் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று சொல்லிவிட முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com