லியோ திரைப்படத்தின் தற்போதைய வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
லியோ திரைப்படத்தின் தற்போதைய வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. படம் வெளியானது முதலே ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எனினும், பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதால் 'லியோ' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் (ரூ.461 கோடி) செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் 12 நாட்களில் உலக அளவில் ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com