ஜெய்பீம்: யாரையும் உயர்த்தி பேசலாம், தாழ்த்தி பேசக்கூடாது சந்தானம் கருத்து

சபாபதி பிரஸ்மீட் நிகழ்வில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'ஜெய்பீம்' சர்ச்சை குறித்து சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம்: யாரையும் உயர்த்தி பேசலாம், தாழ்த்தி பேசக்கூடாது சந்தானம் கருத்து
Published on

சென்னை,

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக டைரக்டர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'ஜெய்பீம்' சர்ச்சை குறித்து சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சந்தானம், யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம், ஆனால் தாழ்த்திப் பேசக் கூடாது. இளைஞர் சமூகத்திற்கு நல்ல சினிமாவைத் தர வேண்டும். 2 மணிநேரம் சாதி, மதம், இனம் என அனைத்தையும் மறந்து தியேட்டரில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கிறார்கள். எனில் அதற்கான படமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் சபாபதி படத்தின் போஸ்டர் போராளிகளை இழிவுபடுத்துவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சந்தானம், ஒரு காட்சியின் புகைப்படத்தை வைத்து அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது. படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்லட்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com